நாம்தமிழர்கட்சியில் சேர்ந்துவிட்டீர்களா? என்ற கேள்விக்கு நடிகை கஸ்தூரியின் பதில் இதுதான்

நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை சார்பில், “நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா?” எனும் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று, செப்டம்பர் 18 திங்கட்கிழமை மாலை 06 மணியளவில் சென்னை, சேப்பாக்கத்திலுள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது.

அக்கருத்தரங்கில், மருத்துவர் இரவீந்தரநாத், தொழில்நுட்ப அறிவுரைஞர் பொன்ராஜ், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் ம.மதிவாணன், சமூகச் செயற்பாட்டாளர், நடிகை கஸ்தூரி, சமூகப் போராளி சபரிமாலா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். இறுதியாக நாம்தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டதால், அவர் நாம்தமிழர்கட்சியில் சேர்ந்துவிட்டார் என்று செய்திகள் வரதொடங்கிவிட்டன.

கஸ்தூரி ட்விட்டரில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர். எனவே அங்கு அவரிடம் ஒருவர், மேடம் நீங்க நாம் தமிழர் கட்சில சேர்ந்துட்டிங்கனு ஒரு செய்தி வந்துச்சு அது உண்மையா??? என்று கேட்டிருந்தார்.

அதற்கு,
இல்லை.NTK மருத்துவ பாசறை நடத்திய கருத்தரங்கில் Drஅனிதாவுக்கு அஞ்சலி செலுத்தி என் கருத்துக்களை பகிர்ந்துகொண்டேன். நான் only சோத்துக்கட்சிதான் என்று பதிலளித்துள்ளார் கஸ்தூரி.

Leave a Response