புளு சட்டை அணியும் சாரண, சாரணியர் இயக்கத்துக்கு காக்கி டவுசர் தலைவரா?- பச்சைத் தமிழகம் கட்சி கடும் கண்டனம்.

பள்ளி மாணவ , மாணவிகளை சங்பரிவராக மாற்ற முயற்சி செய்வதா ? பச்சைத் தமிழகம் கட்சி சார்பில் கடும் கண்டனம்.

சாரணர் , சாரணியர் இயக்கத்துக்கு பிஜேபி ஹெச்.ராஜாவை நியமிக்க பாசிச அடிமை அரசு துடிப்பதன் மூலம் பள்ளி மாணவ , மாணவிகள் அனைவருக்கும் ஆர்.எஸ்.எஸ்சின் காக்கி டவுசரும் , அதன் கொள்கைகளும் கொடுத்து அடுத்த தலைமுறையினருக்கு ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தங்களை விதைக்க பாஜக அரசு மறைமுகமாக முயல்கிறது. தமிழக அரசை நிர்பந்தித்து பிஞ்சு குழந்தைகளின் மத்தியில் நஞ்சை விதைக்க துடிக்கிறது.

பேனாக்களும் , புத்தகங்களும் , நோட்டுகளும் தூக்க வேண்டிய வயதில் கத்திக்களை தூக்கி , புத்தி கூர்மையை மழுங்கடித்து , இந்துத்துவா விதைகளை விதைத்து தமிழக மெங்கும் காவி மையத்தை தூவ அஸ்திவாரத்தை பள்ளிகளிருந்து துவங்க பிஜேபி திட்டமிடுகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க சாரண , சாரணியர் இயக்கத்தில் காவியை மற்றும் தூக்கி பிடிப்பதோடு , மதக்கலவரத்தையும் , சாதிக்கலவரத்தையும் தூண்டும் விதத்தில் தொடர்ந்து பேசிவருவதோடு , போராளிகள் மட்டுமல்லாமல் கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்களை தேசவிரோதியாக பேசி வரும் பிஜேபியின் ஹெச். ராஜாவை நியமிக்க என்ன தகுதி இருக்கிறது ?
சாரணர் ,சாரணியர் இயக்கத்துக்கு அவர் செய்த பணி என்ன ? புளு சட்டை அணியும் அந்த இயக்கத்தை காக்கி டவுசர் கொடுத்து சங்பரிவார் இயக்கமாக மாற்றும் முயற்சி வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற மோசமான விளைவுகளை உண்டாக்கும் முயற்சியை அரசுகள் கைவிட வேண்டும் என பச்சைத் தமிழகம் சார்பில் எச்சரிக்கை விடுகிறோம்.

பச்சைத் தமிழகம் கட்சி

Leave a Response