ஓவியா விசயத்துல நான் செஞ்சது தப்புதான் – ஜூலியின் ஒப்புதல் வாக்குமூலம்

பிக்பாஸ் வீட்டுக்குள் திரும்ப வந்திருக்கும் ஜூலி, சிதைந்து போன தன்னுடைய பிம்பம் குறித்து புலம்பியதைப் பார்க்கப் பரிதாபகரமாக இருந்தது. வெளியே போன பிறகு எப்படி இருந்தது? என்று பிந்துமாதவி கேட்டதற்கு, சமூக வலைத்தளங்கள்ல உள்ள கருத்துக்களை படிக்க முடியலை. அத்தனை மோசமா இருந்துச்சு. மக்கள் என்னை ஏத்துக்கற மூடில் இல்லை. என்னை தீவிரவாதி மாதிரி பார்க்கறாங்க. நீ செத்துப் போயிருப்பன்னு நெனச்சோம் என்றலெ்லாம் கமென்ட் வருது. ‘நீ ஒரு பொய்க்காரி-ன்னு திரும்பத் திரும்பச் சொல்றாங்க,ஓவியா விஷயத்துல நான் செஞ்சது தப்புதான். ஆனா நான் மாறவே மாட்டேன்னு எப்படி நெனக்கலாம். என் அடிப்படையான காரெக்ட்ரை மாத்த முடியாது. ஆனால அதில் இருக்கிற தவறான பழக்கங்களை நிச்சயம் மாத்திப்பேன். சரி.. எவ்ள நாள்தான் அடிப்பீங்க.. திட்டுவீங்க.. என் பலவீனத்தை பலமா மாத்திப்பேன் என்றார் ஜூலி.

கமல் சொன்னது போல கோபத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் பிசகி விட்டு, முதிர்ச்சியின்மை காரணமாக சறுக்கிய ஓர் இளம் பெண்ணை, அவர் மன்னிப்பு கேட்ட பிறகும் மக்கள் இத்தனை வசை பாடுவது முறையாகத் தெரியவில்லை.

மக்கள் ஒருத்தர் மீது அன்பு வெச்சிட்டாங்கன்னா அத்தனை சீக்கிரம் விட்டுத் தர மாட்டாங்க’ன்றது நல்ல விஷயம்தான். ஆனால் வெறுப்பையும் அதே பிடிவாதத்துடன் பின்பற்றத் தேவையில்லை. இப்ப வந்திருக்கிறது வேற ஜூலி என்று சிநேகன் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்.

சினேகனின் கருத்து பற்றி ஜூலியிடம் கேட்டால், அவரு மேல எப்பவும் பாசம் மரியாதைல்லாம் இருக்கு. ஆனா பழைய ஜூலி எப்படி திரும்ப வர முடியும். அவ வர மாட்டா. எல்லோரையும் முழுசா நம்பிட்டேன். எந்த இடத்துல எது பேசணும், எது பேசக் கூடாதுன்னு இப்ப தெரிஞ்சிட்டு. ஆயிரம் நல்லது செஞ்சாலும் ஒரு கெட்டதுனால எல்லாமே மாறிடுது. இனிமே யாரைப் பத்தியும் புறம் பேசக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன் என்றார்.

ஜூலியிடம் நல்ல மாற்றம் தெரிகிறது. இப்படியே போனா அடுத்த ஓவியாவாக மாறும் வாய்ப்பு அவருக்கு இருக்கிறது.

Leave a Response