அட்லீ தனது போன படமான ‘தெறி’யில் நான் கடவுள் ராஜேந்திரனை மட்டுமே வைத்து காமெடியை ஒப்பேற்றி இருந்தார். இந்தநிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்திருக்கும் ‘மெர்சல்’ படத்தின் மூலம் மீண்டும் விஜய்யுடன் கைகோர்த்துள்ளார் நகைச்சுவை நடிகர் வடிவேலு.. அதனால் நகைச்சுவை காட்சிகள் இவர்கள் கூட்டணியின் முந்திய படங்களான ‘பிரண்ட்ஸ், போக்கிரி, காவலன்’ ரேஞ்சுக்கு கலகலப்பாக இருக்கும் என சொல்லப்படுகிறது..
இந்தநிலையில் நடிகர் சந்தானம் இந்தப்படத்தின் சில காட்சிகளில் நடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவர் தான் ஹீரோவாகிவிட்டாரே, அவராவது சின்ன ரோலில் நடிப்பதாவது என்கிற சந்தேகம் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் ஏற்கனவே சந்தானத்தை ராஜா ராணி படத்தில் பயன்படுத்தி இருந்த, அட்லீ, இந்தப்படத்தில் முக்கியமான கேரக்டரில் அவரை நடிக்க வைத்திருப்பதாகவும், அதனை வெளியில் தெரியாமல் சஸ்பென்ஸ் ஆக வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.