மோடி அரசில் கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் நரேந்திரசிங்தோமர், இந்திய ஒன்றிய அரசியல் சட்டத்தில், மாநில அரசுகளோடு தொடர்பு கொள்ளும்போது அந்தமாநில மொழி அல்லது ஆங்கிலத்தில் தொட்ர்பு கொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதை மீறியிருக்கிறார்.
அவர், ஒடிசா மாநில பாராளுமன்ற உறுப்பினர் தத்காசத்பதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முழுக்க இந்தியைப் பயன்படுத்தியுள்ளார். அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, எதற்கு இந்தியைத் திணிக்கவேண்டும் என்று மத்திய அமைச்சருக்குக் கேள்வி எழுப்பியதோடு நில்லாமல், முழுக்க ஒடியா மொழியிலேயே அவருக்குப் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விவரங்களை அவர் தன்னுடைய ட்விட்டரிலும் வெளியிட்டார். இதனால் அவருக்குப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியைத் திணிக்கும் மத்திய அமைச்சருக்குச் சரியான பதிலடி கொடுத்துவிட்டீர்கள் என்று பலரும் அவரைப் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.