ஓவியா விசயத்தில் சக்தி உணர்ச்சிவசப்பட்டது எதனால்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக்தி, ஓவியாவை அடிக்கப் போனார். அதைக் கேட்டதும் சக்தியின் அப்பா இயக்குநர் பி.வாசு அதிர்ச்சியடைந்துவிட்டாராம். அவர் இதுபற்றி ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதில்,

சக்தி ஓவியாவை அடிக்கப்போனான் என்று கேட்டதும் எனக்கே கொஞ்சம் ஷாக்காகிடுச்சு. ஆக்‌ஷன்ல அடிப்பேனு சொன்னதக்கூட மறந்திடலாம். சொல்லால காயப்படுத்தக் கூடாது. சக்தி சொல்லால காயப்படுத்தலனு நினைக்கிறேன். மத்தவங்க மேல மரியாதை எல்லாம் ரொம்ப ஜாஸ்தியா வைப்பான். கோபத்தில் வார்த்தையைவிட்டுட்டு, ‘இப்படி சொல்லிட்டமே’ அப்படினு ஃபீல் பண்ணுவான். அந்த நிகழ்வுக்குக் கூட ஃபீல் பண்ணான். சில நேரங்களில் சிலருக்கு, ரியாலிட்டி ஷோக்களில், இது ஷோ என்பதை மறந்து, நம்ம வீட்ல நடந்துக்கிற மாதிரி நம்மளையும் மீறி வந்துவிடும். அதை டெலிகாஸ்ட் பண்ணும்போதுதான் நம்ம தப்பு தெரியும். சக்தி, தான் சொன்னதையோ, செய்ததையோ ‘நான் பண்ணல’னு சொல்ல மாட்டான். அதை ஒத்துக்கிட்டு, இதனாலதான் அந்த நேரத்தில் அப்படி நடந்துக்கிட்டேனு சொல்லுவான்.

ஓவியா வெளியில் கிளம்பினப்ப ‘திரும்பிப் பார்த்தால் மன்னிப்புக் கேட்கலாம்னு நினைச்சேன்’னு சொல்லியிருக்கானே. தவறுனு உணரக்கூடிய ஆள். சண்டை போடுறதுக்கும், ஹார்ம் பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. ஒரு வார்த்தை என்பது யாரும் மறக்க முடியாத விஷயம். இரண்டு அடி அடிச்சாக் கூட மறந்து போயிடும். பழிவாங்குவது, பொய் சொல்வது என எதுவுமே அவனுக்குத் தெரியாது. எனக்குத்தானே நடந்தது விட்டுடுங்க’னு ஏதாவது பிரச்னையில் நான் கோபப்பட்டாக்கூட என்னை கன்ட்ரோல் பண்ணுவான். இதுவரை பார்த்த வரைக்கும், ஓவியா விஷயத்தில் மட்டும்தான் எமோஷனலாகிட்டான்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response