காயத்ரிக்கு நடிகை ஸ்ரீபிரியா ஆதரவாகப் பேசுவது எதனால்?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த கருத்துக்களை அவ்வப்போது நடிகை ஸ்ரீபிரியா வெளியிட்டு வருகிறார்.

அதுவும், நடிகை காயத்ரி ரகுராம் பற்றிய தனது கண்டனங்களையும் தெரிவிப்பார். இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் மற்றவர்கள் தனிமைப்படுத்திய நடிகை காயத்ரி ரகுராம் அந்தவீட்டில் தனியாக இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

ஓவியா வெளியேறிய பிறகு எல்லோர் கோவமும் ஆரவ்வின் மேல் திரும்பியது. இந்த வாரம் கண்டிப்பா ஆரவ் தான் எவிக்சன் ஆவார் என்று எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில் ரைசா தவிர மற்ற எல்லோருமே நாமினேட் செய்யப்பட்டு விட்டதால் இந்த வாய்ப்பு இனிமேல் கிடைக்கவே கிடைக்காது என முடிவு செய்து மக்கள் காயத்ரிக்கு குறி வைத்து விட்டனர்.

ஆரவ்வை அடுத்த வாரம் கூறி வெளியேத்திக்கலாம், காயத்ரி இந்த முறை போனால் இனி நாமினேட் செய்யப் படமாட்டார் என்பதால் மக்கள் கோவம் முழுக்க காயத்ரி பக்கம் திரும்பி விட்டது. இந்த வாரம் காயத்ரி வெளியேறும் வேலைகள் தொடங்கி விட்டன என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்க அதற்கு மாறான கருத்தை ஸ்ரீபிரியா சொல்லியிருக்கிறார்.

இந்த வாரம் காயத்ரியின்நெருங்கிய நண்பர் சக்திதான் வெளியே போக வேண்டும் என்றும் காயத்ரி பிக்பாஸ் வீட்டிலேயே இருக்க வேண்டும். அப்போது தான் அவருக்குத் தனிமை என்றால் என்ன என்பது தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும் தன்னுடைய ஸ்டேட்டர்ஜி எப்படி என்றும் நடிகை ஸ்ரீபிரியா தனது பதிவில் கேட்டுள்ளார்.

Leave a Response