பிக் பாஸ் ஆபாசத்தின் உச்சத்தைத் தொட்டுள்ளது

உள்ளே நடந்த அனைத்தையும செரித்துக் கொண்டு (எதிர்கால நலன் கருதி) ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் மிஸ் செய்யப்போவதாக கூறுகிறார் ஜூலி. திடீர் புகழ் வெளிச்சத்தையும், அதன் பின்விளைவுகளையும் சந்தித்த சாமானிய பெண் ஒருவரின் இயல்பு அதுவாகத்தான் இருக்க முடியும். அவரை அவ்வாறே வெளியேற அனுமதிப்பதுதான் நாகரீகமாக இருக்க முடியும்.

அவ்வாறு செய்யாமல் அந்த பெண்ணைப்பற்றி மற்றவர்கள் கூறிய எதிர்மறைக் கருத்துகளை குறும்படமாகப் போட்டுக்காட்டி, அவர்கள் மீது ஒரு வன்மத்தை விதைத்து அனுப்புவது ஆபாசம்தானே?

வெளியுலகத் தொடர்பு இல்லாத நிலையில் எதிரே பார்ப்பவர்களைப் பற்றி மற்றவர்கள் பேசுவது இயல்பான ஒன்றாகும். அது எப்போதும் நல்லதாகவே இருப்பது சாத்தியமற்றது.

ஏற்றத்தாழ்வு மிக்க ஒரு சமூகத்தில் ஜூலி பொய் கூறியதையெல்லாம் ஒரு மிகப்பெரிய குற்றமாகக் கருதி, அதற்கு மன்னிப்பு கேட்கக் கோருவதுகூட ஆபாசத்தின் உ்ச்சம்தான். !

ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக்கிற்கு மற்றவர்கள் மனதில் நினைப்பதெல்லாம் கேட்கும். அதுபோல் நம்மைப்பற்றி மற்றவர்கள் நினைப்பது நமக்குத் தெரியவந்தால் நாம் தற்கொலை செய்து கொள்வோம். அல்லது பைத்தியம் பிடிக்கும். இதுதான் நிலவரம்.
மக்களின் பிரதிநிதியாகத் தம்மைக் கூறிக்கொள்ளும் கமலஹாசன் உண்மையில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் பிரதிநிதியாகவே இருக்கிறார். அதுதான் சாத்தியமானதும்கூட.

ஆரவ்விடம் கேட்ட கேள்விகளை இந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும், நிகழ்ச்சித் தொகுப்பாளரும் முதலில் கண்ணாடி முன் நின்று தம்மைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.

– வழக்கறிஞர் சுந்தர்ராஜன்

Leave a Response