ஓவியா சொல்வதை ஏற்றுக்கொள்வது நம் வாழ்க்கைக்கு நல்லது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலரும் ஓவியா வெளியில் வர வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள். ஏனெனில் மற்றவர்கள் ஓவியாவை மிகவும் கொடுமைப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புதிதாக வந்த புரொமோவில் ஓவியா ஒட்டுமொத்த குடும்பத்தினருடனும் பேச மறுக்கிறார். அதோடு பிக்பாஸ் தன்னை அழைக்கும் வரை நான் சாப்பிட மாட்டேன் என்று கூறுகிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் குடும்பத்தினர் மீது கடும் கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர். அதோடு நிகழ்ச்சியில் இருக்கும் சில பேர் மீது ரசிகர்களுக்கு வெறுப்பும் ஏற்பட்டு வருகிறது.

ஆனால் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் பலரின் பாராட்டுக்களை பெற்று வருபவர் ஓவியா. நிகழ்ச்சியில் ஓவியா மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

ஒரு விஷயத்துக்கு ஒரு தடவ அழுதுட்டா, அதுக்காக திரும்பவும் அழுக கூடாது.

எல்லாருக்குள்ளேயும் தான் சோகம் இருக்கு, அதை வெளிப்படுத்தி காட்டிட்டே இருக்கக் கூடாது.

சொல்றத சொல்ற மாதிரி சொன்னா எல்லாரும் கேட்பாங்க.

அவ நடிக்கிறவளாவே இருக்கட்டும், அதை இந்த நேரத்துல சொல்லி காயப்படுத்தனுமா.

உங்க பேரு என்னால கெடக் கூடாது.

இந்த விஷயங்களை நாம் கருத்தில் கொண்டால் நமக்கும் வாழ்க்கையில் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Response