
பிக்பாஸ்
பிந்து காயூவை பரணி மேட்டரில் சுளுக்கெடுப்பதுடன் இன்றைய பொழுது இனிதே ஆரம்பித்தது. ‘என்ன ஆகியிருக்கப்போகுது..கையோ, காலோ உடைஞ்சிருக்கும்..அவ்ளோ தானே?’ என்று காயூ சொன்னது தெய்வ லெவல்!
பிக்பாஸ் வீடே ஒரு மெண்டல் ஹாஸ்பிடல் மாதிரி தான் இருக்கிறது. இதில் அதற்குள் மெண்டலாக நடிக்க வேண்டும் என்று டாஸ்க் வைத்தால், எரிச்சலாக இருக்கிறது. நிகழ்ச்சியின் சுவாரஸ்யமே, அவர்கள் அவர்களாக இருக்கும்போது என்ன பேசுகிறார்கள் என்பது தான். எனவே டாஸ்க் கண்றாவிகளை ஓரிரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொள்வது நல்லது.
சிநேக்பாபு அவ்வப்போது தெளிவாகப் பேசி லைக்ஸ் அள்ளிவிடுகிறார். ஓவியாவிடம் ஆரவ் தெளிவாகப் பேசாமல், இப்படி சுற்றவிடுவது தப்பு. இதை ஓவியாவால் தாங்க முடியாது எனும் நம் கவலையை அவரும் இன்று வெளிப்படுத்தினார். ‘வில்லன்’ பிக்பாஸும் டாஸ்க் என்ற பெயரில் லவ் ஃபெய்லியர் வேடத்தை ஓவியாவிற்குக் கொடுத்து வெறியேற்றினார்.
’ஒரு கட்டத்தில் இந்த டாஸ்க்கை என்னால் செய்ய முடியாது..போய்யா’ என்று தில்லாகச் சொல்லி தலைவி மாஸ் காட்டினார். உள்ளேயே இருக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் தலைவிக்கு இல்லை. எனவே ‘உன்னால என்ன முடியுமோ, செஞ்சுக்க…போ’ என்று கெத்து காட்ட முடிகிறது.
ஆரவ் முதலிலேயே தெளிவாகப் பேசி இருக்கலாம். ‘ப்ளே பாய்’ இமேஜ் கிடைக்கும் என்று நினைத்து வரிசையாக ஓவியா/ரைஸா/ஜூலி என்று ஒரு ரவுண்ட் வந்துவிட்டு, இப்போது மீண்டும் ஓவியாவிடம் சிக்கிக்கொண்டிருக்கிறார். கடந்த வாரம் ஆரவ்வும் காதலில் விழுவது தெரிந்தது. காயூ மாதிரி நல்ல உள்ளங்கள் இருக்கும்போது அப்படி நடக்க முடியுமா? ‘உன் ஃப்யூச்சரை கெடுத்துக்காதே’ என்று ஆரவ்விடம் பற்ற வைத்து, கலைத்துவிட்டார். இப்போது ஆரவ் பின்வாங்குகிறார். ஆனால் ஸ்விட்ச் போட்டது போல், மனசை மாற்ற முடியுமா? அதுவும் தலைவி போல் கணத்துக்குக் கணம் வாழும் பரிசுத்த ஆத்மாவினால்?
ஆரவ் சொல்கிற எதையும் ஓவியா கேட்கிற நிலையில் இல்லை. நாளை ஒரு ரகளை இருக்கிறது. ஆனால் ஓவியாவின் சுயமரியாதையைச் சீண்டினால் போதும், ஆரவ்வை தூக்கி எறிந்துவிடுவார்..என்ன, கொஞ்சம் சேதாரம் ஆகலாம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடிநாதமே, அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கும் நம் ஆவலை யூஸ் பண்ணிக்கொள்வது தான். ஆனால் ஓவியா மாதிரி அன்புக்கு ஏங்கும் ஒரு பெண், பூ மலர்வது போல் காதலில் விழுவதும், விழும் இடம் பொய்யான ஒன்றாக இருப்பதும், அடுத்து காதல் தோல்வியை நோக்கி அவர் போவதும்…………ப்ச், நியாயத்திற்கு இதையெல்லாம் நாம் பார்க்கக்கூடாது. அந்தரங்கம் புனிதமானது!


