
அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கரின் முகநூல் பதிவு….
பிக்பாஸ் குறித்த ஸ்டேட்டஸ் போட்ட அடுத்த நொடி, ஓவியா ஆர்மின்னு ஒரு வாட்ஸ் அப் குரூப்ல என்னை சேர்த்தாங்க. சேர்த்தவர் நெருங்கிய நண்பர். அதனால வெளியாக முடியல.
வழக்கமா எந்த வாட்ஸ் அப் குரூப்பும் திறந்து பாக்கறது இல்ல. இந்த குரூப்புக்கும் அதே நிலை தான். காரணம், வழக்கமான பார்வர்ட், கட்காப்பி தகவல் தானே நிரம்பி வழியுது.
நேத்தில இருந்து ஓவியா ஆர்மி குரூப் நோட்டிபிக்கேஷன் எகிற ஆரம்பிச்சுது. சரின்னு வாட்ஸ் அப்ப திறந்தேன். சரசரன்னு மெசேஜ் குவிஞ்சிகிட்டு இருந்தது இந்த குரூப்ல.
என்ன தான் நடக்குதுன்னு குரூப்ப ஓப்பன் பண்ணி பார்த்தேன். “ஓட்டு போட்டுட்டேன், கடமை முடித்தேன், நாளை நமதே”ன்னு அரசியல் கணக்கா மெசேஜ்கள்.
இன்னைக்கு ஆயிரம் மெசேஜ்னு காட்டிச்சு.
விடக்கூடாது காயத்ரிய, ஒழிந்தாள் ஜூலி, வந்தாள் பிந்துமாதவின்னு மெசேஜ்கள்.
தங்கத் தலைவி, யதார்த்த தலைவின்னு டாப் லெவல்ல ஓவியாவுக்கு புகழாரம்.
மீம்ஸ், வீடியோன்னு வேற நிரப்பறாங்க. பிக்பாஸ் நிகழ்ச்சியப் பத்தி நொடிக்கு நொடி விமர்சனம் வேற.
இப்ப உச்சகட்டமா, ” படை திரளட்டும்”ன்னு அழைப்பு.
ஆள்லாம் யாருன்னு பார்த்தேன். எல்லாம் முக்கிய பிரமுகர்கள் தான்.


