ஓவியாவை காப்பாற்றிய கமலே, இதற்கும் உரத்தகுரல் கொடுங்கள்


கதிராமங்கலம் போராட்டத்துக்காக சிறைப்படுத்தப்பட்டிருக்கும் பேராசிரியர் ஜெயராமனின் தந்தை இயற்கை எய்தினார்
இதனால் பேராசிரியர் ஜெயராமனை விடுவிக்க வேண்டும் என்று தமிழார்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
தமிழக அரசின் இரும்புச் செவிகளுக்கு இந்தத் துயரக்குரல் எட்டாது என்பதாலும் திடீர் அரசியல்வாதி ஆகியிருக்கும் கமலுக்கு பேராசிரியர் ராஜநாயகம் விடுத்துள்ள அழைப்பில்…..

அவசரம் கமல். உங்களால் முடியும்.

“முடிவெடுத்தால் முதல்வர்” கமலுக்கு.
அவசர வேண்டுகோள்.
இன்று ஓவியா காப்பாற்றப்பட்டதை அறிவித்தீர்கள்.
நாளை இரவு நமீதா அல்லது கணேஷைக் காப்பாற்றுவீர்கள்.

ஆனால் அதற்கு முன்:

கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான பேராசிரியர் ஜெயராமனின் தந்தை இன்று மாலை காலமாகிவிட்டதாக அறிகிறோம். பெற்ற தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ஜாமீன் தருமாறு உடனடியாய் ஓர் உரத்த குரல் கொடுங்கள்.

உங்களால் முடியும். இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response