விக்ரம் தற்போது கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் மற்றும் விஜய்சந்தரின் ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களில் மாறிமாறி நடித்து வருகிறார். இதில் ‘ஸ்கெட்ச்’ படத்தில் முக்கால்வாசி காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டனவாம். இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட இருக்கின்றன.. அனேகமாக ஜூலை 20க்குள் அந்த வேலைகளும் முடிவடைந்து விடுமா.
இந்தப்படத்தை ஆயுதபூஜை விடுமுறையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு படப்பிடிப்பை ஜரூராக நடத்தி வருகிறார்களாம்.. தமன்னா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் ‘கங்காரு’ ஸ்ரீபிரியங்கா, சூரி, ராதாரவி, ஸ்ரீமன், ஆர்.கே.சுரேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.