அம்மா கிரியேஷன்ஸ் சிவாவின் வெள்ளி விழா வருட திரைப்படம் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்.அப்படத்தின் இசை வெளியீட்டுவிழா ஜூன் 23 மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. இதில் அதர்வா முரளி, சூரி, ரெஜினா கசன்றா,அதீதி போஹன்கர், இசையமைப்பாளர் டி.இமான், இயக்குநர் ஓடம் இளவரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசியது,
இப்படத்துக்கு ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற மிகச்சிறப்பான தலைப்பு தமிழில் உள்ளது அதை GGSR என்று ஆங்கிலத்தில் அழைப்பது தவறாகும். வரிவிதிப்புக்காக தமிழில் பெயர் வைக்கக்கூடாது. தமிழ் மேல் பற்றோடு நாம் தமிழில் தலைப்பு வைக்க வேண்டும்.தமிழ் நிலைத்து இருக்கவேண்டும் என்றால் எல்லோரும் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்றார் ஆர்.கே.செல்வமணி.
ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் இசை வெளியீட்டு விழாவுக்கு இடையே இயக்குநர் வெங்கட்பிரபுவின் பார்ட்டி திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிட்டு விழா நடந்தது இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, படத்துக்கு இசையமைக்கும் சத்யா ராஜ், ரம்யா கிருஷ்ணன், சிவா , கயல் சந்திரன்,ரெஜினா சசன்றா, நிவேதா பெத்துராஜ்,சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரிவிலக்குக்காக தமிழில் பெயர் வைக்காமல் தமிழ்ப்பற்றோடு பெயர் வைக்கவேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி பேசிய அதே மேடையிலேயே தன் படத்துக்கு பார்ட்டி என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்து தொடக்க விழாவை நடத்தியிருக்கிறார் வெங்கட்பிரபு.