விஜய்யை காந்தி என்கிறாரோ அவரது தந்தை எஸ்.ஏ.சி..?


தலை ஆடாவிட்டாலும் வால் ஆடும் என்பதுபோல அரசியல் ஆசை இருந்தாலும் அதை கமுக்கமாக வைத்திருக்கும் விஜய்யைப்போல அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரால் இருக்கமுடியவில்லை.. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பேசிய பேச்சில் ரஜினியை மறைமுகமாக தாக்கியும் விஜய்யை உயர்த்தியும் பேசியுள்ளார்.

மக்கள் தங்களை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுப்பதாக நினைக்கக் கூடாது. தங்களுக்கு வேலை செய்யும் ஒரு வேலைக்காரனை தேர்ந்தெடுப்பதாக நினைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், இப்போது இன்னொரு காந்தி பிறக்க வேண்டும். ஆம், இளைஞர்களிடமிருந்து இன்னொரு காந்தி அரசியலுக்கு வரவேண்டும். அதேசமயம் 70 வயதிலும், 80 வயதிலும், அரசியலுக்கு வந்தால் யாராலேயும் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார். இப்போது புரிகிறதா இவர் யாரை குறிப்பிடுகிறார் என்று..

Leave a Response