
தனியார் இணையதள சேனல் ஒன்று வருடந்தோறும் திரையுலகில் சிறந்த பங்களிப்பை தந்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.. இந்த வருடம் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் அந்த விழாவில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசின் போக்கை கண்டித்தும் குரல் எழுப்பியுள்ளார்.
நாம் நன்றாக உள்ளோம். ஆனால் சோறு போடும் விவசாயி நன்றாக இல்லை. அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகள் ரேஷனில் இலவச அரிசிக்காக நிற்கிறார்கள். மூன்று வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விட்டது. இப்போதும் ஆரோக்கியம் இல்லாத உணவு தான் கிடைக்கிறது. அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாத நிலையும் ஏற்படும்.
வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். முதலில் விவசாயிகளுக்கு நல்லரசாக மாற வேண்டும். விவசாயப் பிரச்னைக்கு அவசியமாக மட்டுமல்ல. அவசரமாகவும் தீர்வு வேண்டும்.” என அவர் மத்திய அரசை விமர்சித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


