ஏ.ஆர்.ரஹ்மானை கவர்ந்த ஒரே கதை எது தெரியுமா..?


சினிமா பிரபலங்கள் எல்லோருமே ஒரு பெருமைக்காக அடிக்கடி உபயோகிக்கும் வாக்கியம் ஒன்று உண்டு. அவரைப்போல ஒரு நடிகரை பார்த்ததில்லை.. இப்படி ஒரு இயக்குனரின் படத்தில் நடித்ததில்லை.. இப்படி ஒரு கதையை நான் கேட்பது இதுதான் முதல்முறை என இடத்துக்கு இடம் இதில் ஏதாவது ஒரு வசனத்தை நாம் கேட்டிருப்போம்..

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன..? இயக்குனர் சுந்தர்.சி ‘சங்கமித்ரா’ என்ற வரலாற்று கதையை பிரமாண்டமாக திரைப்படமாக இயக்க முடிவு செய்துள்ளார். இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து பேசிய ஏ.ஆர். ரஹ்மான் 6 மாதங்களுக்கு முன் ‘சங்கமித்ரா’படத்தின் 30 நிமிட கதையை கேட்டேன். அந்த 30 நிமிட கதையே இந்தப் படத்திற்கு என்னை இசை அமைக்க சம்மதிக்க வைத்தது. சமீபத்தில் ‘சங்கமித்ரா’போல் எந்த கதையும் என்னை கவர்ந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன் அவர் எத்தனை படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்றும், அதில் எத்தனை படங்கள் கதையம்சம் கொண்ட படங்கள் என நீங்கள் தான் கணக்கிடுக்கொள்ள வேண்டும்.

Leave a Response