ஜெ சமாதிக்கு வந்த விந்தியா ; காரணம் இதுதான்..!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அவரது சமாதி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளதுடன் அரசியலில் பரபரப்பான திருப்பங்களுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.. ஓ.பன்னீர்செல்வம் ஜெ சமாதியில் தியானம் செய்தார் கட்சி உடைந்தது.. சசிகலா ஜெ சமாதியில் அடித்து சத்தியம் செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்றார்..

ஜெ.சமாதிக்கு போய்வந்த தினகரனின் நிலையம் நாம் அறிந்த ஒன்றுதான். ஜெ.வின் அண்ணன் மகள் ஜெ சமாதிக்கு போய்விட்டு வந்து தனிக்கட்சி ஆரம்பித்து ஒன்றும் தேராமல் போய் கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட கதையையும் நாம் பார்த்தோம்.. இப்படி ஜெ.சமாதிக்கு யாராவது வந்து தியானம் பண்ண ஆரம்பித்தால் அடுத்து என்ன நடக்குமோ என்கிற ஆர்வம் இயல்பாகவே நமக்குள் எழ ஆரம்பித்துவிட்டது.

இப்போது அந்தப்பட்டியலில் லேட்டஸ்ட் ஆக இடம்பிடித்துள்ளார் நடிகை விந்தியா. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அ.தி.மு.க., பேச்சாளராக இருந்தார் நடிகை விந்தியா. இவர் நேற்று திடீரென, ஜெ., நினைவிடம் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். நேற்று மாலை, 6:00 மணிக்கு, நான்கு பெட்டி மாம்பழங்களுடன், ஜெ., நினைவிடம் வந்தார் விந்தியா. மாம்பழங்களை ஜெ. நினைவிடத்தில் வைத்து வணங்கினார். பின் மாம்பழங்களை அங்கு இருந்தோருக்கு வழங்கினார்.

இவரும் தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறாரோ என நினைத்த வேளையில், “ஆண்டுதோறும் எங்கள் தோட்டத்து மாம்பழத்தை, அம்மாவுக்கு கொடுப்பது வழக்கம். தற்போது அவர் இங்கு இருப்பதால், வந்தேன். அவர் உடல் மண்ணுக்குள் இருக்கலாம். அவரது அன்பு, ஆட்சி, தமிழக மக்கள் மனதில் உள்ளது. நான் கொடுக்கும் மாம்பழம், மக்களுக்கு கொடுத்தால், அவருக்கு போய் சேரும் என்றுதான் இங்கு வந்தேன். பயப்பட வேண்டாம் நான் கட்சி ஆரம்பிக்க இங்கு வரவில்லை” என கூறி தமிழக மக்கள் நெஞ்சில் பால் வார்த்துள்ளார் விந்தியா..

Leave a Response