
மோடியின் இலங்கைப்பயணத்தையொட்டி மே 17 இயக்கம் திருமுருகன் எழுதியிருப்பது…
யாழ்ப்பாணத்திற்கும், திரிகோணமலைக்கும் செல்லாமல் மலையகத் தமிழரை மட்டுமே சந்திக்க மோடி சென்றதன் காரணத்தைப் பற்றி தமிழீழ தோழர் ஒருவரிடம் விசாரித்ததில் உண்மையை அம்பலப்படுத்தினார்.
“வடக்கு கிழக்குப் பகுதியில், ஈழத்தமிழர்கள் பெருமளவில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க தயாராக இருந்த காரணத்தினாலும், மோடி-மைத்ரிபாலா நடத்தும் கூட்டத்திற்கு தமிழர்கள் வருவது கடினம் என்பதாலும் அவர் அங்கு வராமல் மலையகத்திற்கு சென்றிருக்கிறார். மலையகத்தில் தமிழர்களின் தலைவர்களுக்கு எதிராக இருக்கும் ஒரு சிலரை வைத்து இக்கூட்டத்தினை கூட்டி இருக்கிறார்கள்” என்றார்.
மேலும் திரிகோணமலையில் ஆக்கிரமிப்பு ஒப்பந்தங்களை போடுவதற்காக இந்திய அரசு முனைவதை தடுக்க கடுமையான எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.
தமிழர்கள், இந்திய பாசிஸ்டுகளுக்கு எதிராக அரசியலை வலுப்படுத்தும் போது மட்டுமே வலிமை பெருகிறோம்.
நேற்று மோடியோடு கைகுலுக்கிய இலங்கையின் ரணில் விக்கிரமசிங்கே, இன்று சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். சீனாவின் ’ஒரே சாலை’ எனும் மேற்கு-மத்திய ஆசிய இணைப்பு சாலை குறித்த நிகழ்விற்கு செல்கிறார். இந்த நிகழ்வில் உலகின் பல நாட்டு பிரதிநிதிகள் பங்கெடுத்தாலும், இந்தியா புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது. அதாவது இந்தியா எதிர்க்கும் திட்டம் குறித்தான கூட்டத்திற்கு ரணில் செல்வதை அறிந்த பின்னரே மோடியின் பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது என்றும் அறியலாம்.
இந்தப் பயணத்தில் 1987இல் இலங்கை ஒத்துக்கொண்ட திருகோணமலை கச்சா எண்ணைத் தொட்டிகளை இந்தியாவிற்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தினை செயல்படுத்த முனைந்தது. கிட்டத்தட்ட இலவுகாத்த கிளி போல 30 வருடங்களாகக் காத்திருக்கும் இந்த ஒப்பந்ததிற்கு இலங்கைக்குள் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
ராஜபக்சே கருப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்திருந்த உடன், மோடி ராஜபக்சேவை சந்தித்து சமாதானம் சொல்லி வந்திருக்கிறார். இப்போதைக்கு நாங்கள் திருகோணமலை ஒப்பந்தம் குறித்து பேச மாட்டோம் என்று கெஞ்சிக் கேட்டு கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்ய வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் மறைக்கவே 10,000 வீடுகள் கட்டித்தருவதாக அறிக்கை எல்லாம் விட்டிருக்கிறார்கள்.
அதாவது கிட்டதட்ட இலங்கையின் அனைத்து அரசியல்வாதிகளின் காலிலும் விழுந்து தனது ரவுடி இமேஜை தெற்காசியா பிராந்தியத்தில் காப்பற்ற முனைந்து தோற்றிருக்கிறது பாஜக-மோடி அரசு.
இலங்கைக்குள் ”இந்தியாவின் ’ராஜதந்திரம்’, நானும் ரவுடி தான் ரவுடிதான் என்று அனாதை ஆவியாக சுற்றிக்கொண்டிருக்கிறது”….
தெற்காசிய பிராந்தியத்தில் தமிழர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் புல்லின் நுனையைக் கூட இந்தியாவால் பிடுங்க முடியாது என்பது இந்தியாவிற்கும், பார்ப்பன கும்பல்களுக்கும் புரியும், ஆனால் தமிழர்களுக்குத் தான் தங்களது வலிமை புரிவதில்லை.
”மோடி சார், இலங்கை நமது நட்பு நாடு, நட்பு நாடுன்னு” சொன்னீங்களே..சிங்கள புத்த பிக்குகளின் காலில் விழுந்தும் எதையும் சாதிக்க இயலாமல் வெறும் கையொடு திரும்பி இருக்கிறது உங்கள் ராஜதந்திரம்.
தமிழனின் முன் மண்டியிடாமல் தெற்காசியாவிலோ, இந்தியப்பெருங்கடலிலோ எதையும் ராஜதந்திர ரீதியாக சாதிக்க முடியாது என்பதை எதிர்காலம் உணர்த்தும்.
திமிருடன் எழுந்து நில்லுங்கள், தமிழர்களே!.. பாசிஸ்டுகள் நம் காலில் விழும் காலம் வெகு தொலைவில் இல்லை


