இளையராஜா-எஸ்.பி.பி சர்ச்சைக்கு முடிவு ; விஷாலின் திட்டம் ஒர்க் அவுட் ஆகுமா..?


தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் தற்போது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரது தலைமையில் நம்ம அணி உருவாக்கப்பட்டு அதில் தயாரிப்பாளராக இருக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் பலரும் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

இந்த அணியினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். தற்போது பாடல்களுக்கு அனுமதி பெறவேண்டும் என்கிற விவகாரத்தில் இளையராஜா-எஸ்.பி.பி குறித்த சர்ச்சை ஓடிகொண்டு இருக்கிறது.. இந்த விஷயத்தையும் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஓர் அம்சமாக முன் வைத்து பேசிவருகிறார் விஷால்…

குறிப்பாக “எங்கள் அணிக்கு அதிக ஆதரவு உள்ளது. நாங்கள் தான் வெற்றிபெறுவோம். நாங்கள் வெற்றி பெற்றதும் சங்கத்தின் மேம்பாட்டுக்காக இளையராஜாவையும், எஸ்.பி.பியையும் இணைத்து இசை நிகழ்ச்சி நடத்துவோம். அதன் மூலம் சங்கத்திற்கு 100 கோடி நிதி திரட்டித் தருவோம்” என்றும் கூறியுள்ளார்… விஷால் தரப்பு ஒருவேளை ஜெயித்தாலும் கூட இந்த திட்டம் ஒர்க் அவுட் ஆகுமா என்பது சந்தேகம் தான்.

Leave a Response