322 பேரில் 143 பேர் கிரிமினல்கள் – இதுதான் உபி பாஜக


403 பேர் கொண்ட உபி சட்டமன்றத்தில் பாஜகவின் 322 எம்.எல்.ஏக்கள் வெற்றிபெற்றுள்ளனர். இவர்களில் 143 பேர் மீது கொலை உள்ளிட்ட கடும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது, இவர்களில் கோண்டா தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாஜகவின் அஜய் பிரதாப் சிங் அவர்கள் தனது வேட்பு மனுவில் தனக்கு 49 கோடி சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார், அதில் 60 கிலோ தங்கம், ஏழு வாகனங்கள் மற்று ஆறு துப்பாக்கிகள் அடக்கம், இந்த துப்பாக்கிகளில் மூன்று இவரது பெயரிலும் மூன்று இவரது மனைவி பெயரிலும் உள்ளன. இந்த முறை உபி தேர்தலில் 1.455 கோடீஸ்வரர்கள் போட்டியிட்டார்கள்.

இந்த முறை உபியில் தேர்வாகியுள்ள 143 புதுமுகங்களில் 107 பேர் கிரிமினல்கள் – பாலியல் வன்கொடுமை புரிந்தவர்கள், குழந்தைகளுக்கு எதிராக கடுமையான குற்றம் புரிந்தவர்கள். இது தான் இந்திய அரசியல் செல்லும் பாதையும் கூட, நிச்சயம் இது கிரிமினல்களின் வளர்ச்சியாகவே இருக்க முடியும், நம் மருத்துவர்கள் கூட CANCER DEVELOP ஆகியிருக்கு என்று தான் சொல்லுவார்கள், அப்படியான ஒரு DEVELOPMENT நோக்கியே நாடு சென்று கொண்டிருக்கிறது..

முத்துக்கிருஷ்ணன்

Leave a Response