“ஆஸ்கர் விருதுக்கு ஆசைப்பட தேவையில்லை” ; ரஞ்சித்


கலைத் துறைகளில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நம் தமிழ்சினிமாவில் வருடந்தோறும் ஆஸ்கர் விருதை குறிவைத்து போட்டிக்கு அனுப்பப்படும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது.

ஆனால், இந்த விருதுகளில் வெறும் கவர்ச்சி மட்டுமே இருப்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஹாலிவுட் படங்களுக்காக டெக்னீஷியன்களுக்காக வழங்கப்படும் விருதுதான் ஆஸ்கர். அந்த விருதின் மேல் எனக்கு பெரிய எதிர்பார்ப்பும் ஏதும் ஏற்பட வில்லை என்று கூறியுள்ளார்..

“ஆசையில் அதை அதை அடைய நினைக்கிறவர்கள் ஆஸ்கர் விருது கிடைத்தால் அதனை பெருமையாக நினைக்கின்றனர். ஆனால், அதில் எனக்கு அதிக விமர்சனங்கள் உண்டு. இந்த விருதுகளில் அதிக கவர்ச்சி மட்டுமே இருப்பதாக நான் நம்புகிறேன். பெர்லின் விருது விழாவையும், வெனிஸ் விருது விழாவையும் சிறந்ததாக நான் கருதுகிறேன். வெற்றிமாறனின் விசாரணை படம் வெனிஸ் படவிழாவில் கலந்து கொண்டது மிகவும் அற்புதமான ஒன்று என்று குறிப்பிட்டு கூறியுள்ளார்.

Leave a Response