நடிகர்களே உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் – அறிவுமதி சீற்றம்


அண்மைக்காலமாக கமல் உள்ளிட்ட நூலோர் எல்லாம் ஒருங்கிணைந்து ஒரேமாதிரி அரசியல் பேசி வருகின்றனர் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நம்மாழ்வார் மொழியில் பாவலர் அறிவுமதி சாட்டையடி…

நாந்தே நம்மாழ்வார் பேசறேன்

நடிகத் தம்பிகளா!
பத்து நாளா
உங்க போக்கு கொஞ்சம்
சரியில்லப்பா
அளவுக்கு மீறி
எங்க வாழ்வுக்குள்ள
நுழையறீங்க

நடப்பு சரியில்லதா.
அதுக்காக
நடிப்பவங்ககிட்ட ஏமாற இனியும்
எங்க சனங்களுக்கு
விருப்பமில்ல.

அவுங்களுக்கு
நடவு நடவும் தெரியும்.
மரம் நடவும் தெரியும்.
எந்த சாமியார்ட்ட போயும்
அதக் கத்துக்க வேண்டிய
அவசியமில்ல.

அவங்களுக்கு மேடையேறி
நடிக்கவும் தெரியும்.
காய்ச்சிய பறைய
அடிக்கவும் தெரியும்.
எந்த நடிகர்கிட்டப் போயும்
அதக் கத்துக்க வேண்டிய
அவசியமில்ல.

அப்படித்தா அவுக அரசியலையும்
அவுகளாகவே பார்த்துக்கட்டும்.
அதுல
யாருக்காகவோ உள்ள
நுழஞ்சு குழப்பிடாதீங்க.

இளையோரும் மாணவரும்
அந்த ஏழுநாள் விழிப்போட
ஒரு நல்ல
தலைவர
தமிழ்நாட்டுக்குத் தேடித்
தரட்டும்

உங்க படங்களுக்குப் பாலபிசேகம் பண்ணிப் பாழாப்போனது போதும்..
இப்போது என்னோட இளைஞர்கள் இவ்வளவு விழிப்பா வராங்க அவங்க உணர்வ மடை மாற்றாதீங்க
நல்லா இருப்பீங்க

ஒதுங்கிப் போயி உங்க வேலைய
ஒழுங்கா பாருங்கப்பா.

இப்படிக்கு
உங்கள் நம்மாழ்வார்

Leave a Response