
ஏற்கனவே அரவிந்த்சாமி, மம்முட்டி இருவரையும் வைத்து ‘புதையல்’ என்கிற படத்தை இயக்கியவர் தான் செல்வா. ஒரு இடைவெளிக்குப்பிறகு இவர் மீண்டும் களத்தில் குதித்து மீண்டும் அரவிந்தசாமியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.. இந்த புதிய படத்தில் அரவிந்தசாமிக்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங் நடித்து வருகிறார்..
நிலையில் இந்தப்படத்தின் புதிய வரவாக சிம்ரன் நுழைந்துள்ளார். படத்தில் இவருக்கு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னொரு கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார்.. இமான் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு தற்போது சொல்லப்பட்டு வருவதுபோல டைட்டில் ‘வணங்காமுடி’ இல்லையாம்.. விரைவில் உண்மையான டைட்டில் பற்றிய அறிவிப்பு வெளியாகுமாம்.


