சிம்பு படத்தை இயக்கி யாகத்தீயில் குளித்தவருக்கு பரிசாக கிடைத்தது விக்ரம் படம்.. !


சிம்பு நடித்த படங்களிலேயே படத்தின் டைட்டிலைப்போல நீளமாக இழுத்துக்கொண்டே போன படம் ‘வாலு’. இந்தப்படத்தை இயக்கியவர் இயக்குனர் விஜய்சந்தர். லேட்டாக வெளியானதாலோ என்னவோ அந்தப்படம் சூப்பர்ஹிட்டும் ஆகவில்லை.. அதேசமயம் மோசமான படம் என்கிற பெயரையும் வாங்கவில்லை… சிம்புவின் மோதிரக்கையால் குட்டுப்பட்ட விக்னேஷ் சிவனுக்கு விஜய்சேதுபதி, அடுத்து சூர்யா என மிகப்பெரிய நடிகர்களின் படங்களை இயக்கம் வாய்ப்பு கிடைத்தது அல்லவா..?

அதேபோல இப்போது விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கம் வாய்ப்பு விஜய்சந்தருக்கு கிடைத்துள்ளது. மாறுபட்ட கதாப்பாத்திரங்களில், வித்தியாசமான கதை களங்களில் நடிப்பவர் விக்ரம். இந்த கதைக்களமும் அப்படி மாறுப்பட்ட கதையம்சம் கொண்டதுதானாம். பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Leave a Response