ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்-நயன்தாரா நடித்துள்ள ‘இருமுகன்’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது அல்லவா..? அதைவைத்து பலரும் பலவாறாக அந்தப்படத்தின் கதையை யூகம் செய்து புதிது புதிதாக பரப்பி வருகிறார்கள்.. பெண் தன்மை கொண்ட தீவிரவாதி விக்ரம் ஒருவர்.. அவரை கண்டுபிடிக்க முயற்சி செய்யும் உளவுத்துறை ஏஜெண்ட் இன்னொரு விக்ரம் என்பதாகத்தான் ட்ரெய்லர் சொல்கிறது..
அதனால் இந்த சீக்ரெட்டை ஏன் இப்போதே உடைத்தார்கள்.. சஸ்பென்சாக வைத்திருக்கலாமே என ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் படத்தின் எடிட்டர் புவன் ஸ்ரீனிவாசன் இதைப்பற்றி சொல்லும்போது “அந்த விஷயம் தெரியாமலா டீசர் உருவாக்கியிருப்போம்” என மர்மப்புன்னகை பூக்கிறார்.
படத்தில் இன்னும் உங்களை ஆச்சர்யப்படுத்தும் விஷயங்கள் நிறைய இருக்கின்றன.. இந்தப்படத்தின் திரைக்கதையை இதுவரை சொல்லப்படாத புதிய பாணியில் சொல்ல இருக்கிறோம்” என்கிறார் புவன்.



