ஜீவா-சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் மோதல்..!


யான் படம் ஜீவாவுக்கு மிகப்பெரிய சறுக்கலாக அமைந்துவிட்டது. அந்தப்படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனத்துக்கு மிகப்பெரிய நட்டத்தையும் ஏற்படுத்தியது.. அதனால் தானாக முன்வந்த ஜீவா படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரிடம் “கவலை வேண்டாம்.. உங்களது அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நான் நடித்து தருகிறேன்.. படம் வெற்றிபெற்றபிறகு மற்றவற்றை பார்த்துக்கொள்ளலாம்” என தைரியம் கொடுக்க, அப்படி ஆரம்பித்த படம் தான் ‘கவலை வேண்டாம்’.

யாமிருக்க பயமேன் படத்தை இயக்கிய டீகே தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் இன்னொரு நாயகனாக பாபிசிம்ஹாவும் கதாநாயகியாக காஜல் அகர்வாலும் நடிக்கின்றனர்.. இந்தப்படத்தை அக்டோபர்-7ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு எடுத்துள்ளார்கள்.

அதேசமயம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ரெமோ’ படமும் ஏற்கனவே அக்-7ஆம் தேதி வெளியாவதற்கு நாள் குறித்துவிட்டார்கள்.. சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் என்கிற ‘ரஜினி முருகன்’ ஹிட் ஜோடி மீண்டும் இணைந்திருப்பதால் அந்தப்படத்திற்கான வரவேற்பே அதிகம் இருக்கும் என்பதால் ஜீவாவிடம் அவரது பட ரிலீஸை தள்ளிவைத்து விடலாமா என கேட்டதற்கு ‘கவலை வேண்டாம்.. படத்தை அதே தேதியில் ரிலீஸ் பண்ணுங்கள்” என கூறிவிட்டாராம். ஆக இரண்டு படங்களும் ஒரேநாளில் மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Response