
நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.அப்போது வெடிக்கப்பட்ட அதிகப்படியான பட்டாசுகளின் புகை எதிரொலியால், சென்னையின் ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு (AQI) மோசமான நிலையை எட்டியது.
சைதாப்பேட்டையில் காற்றின் தரக் குறியீடு அதிகபட்சமாக 302 வரை பதிவாகியது.மணலியில் 269, அரும்பாக்கத்தில் 243,தரமணி,ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் அசோக் நகரில் தலா 286 எனவும் பதிவாகி காற்று மண்டலம் புகைமூட்டமாகக் காட்சியளித்தது.
இதுதவிர தியாகராய நகர் மற்றும் ஆழ்வார்பேட்டையில் தலா 283, பெரவள்ளூரில் 276, வேளச்சேரியில் 273, ஆர்.ஏ.புரத்தில் 262, கொடுங்கையூரில் 200, ராயபுரத்தில் 199, பெருங்குடியில் 188 மற்றும் கும்மிடிப்பூண்டியில் 163 என்ற அளவில் காற்றின் தரம் பதிவாகி உள்ளது. நேற்றிரவு 11 மணியளவில் சென்னையின் காற்றின் தரம் 1,123 என்ற அதிவேக உச்சத்தை எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு புகையின் காரணமாக விமானச்சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.ராய்ப்பூரில் இருந்து சென்னை வந்த இன்டிகோ விமானம்,சென்னை விமான நிலைய ஓடுதளப் பகுதியில் பெருமளவு பட்டாசு புகைமூட்டம் சூழ்ந்திருந்ததன் காரணமாகத் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டது.இந்த புகைமூட்டம் காரணமாக மொத்தம் 26 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர்
காற்றின் தரம் மோசமானது குறித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தராஜன் கூறியிருப்பதாவது….
சென்னை மக்களே இது நியாயமா?
காற்று மாசின் அளவு இவ்வளவு மோசமாக இருந்தால் நீங்கள் 60 சிகரெட் பிடித்தற்கு் சமம்.
கொடுமை !
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


