முதல்வர் விஜய் காட்டிய சைகை – அதிமுக திடுக் குற்றச்சாட்டு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி குதிரை பேரம் நடத்தியது என்கிற குற்றச்சாட்டு தொடர்பாக,அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி,இன்பதுரை பாமஉ ஆகியோர் காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் மனு அளித்தனர்.

பின்னர்,செய்தியாளர்களிடம் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது…

குதிரைபேர நிகழ்வுகளைத் தடுக்கவேண்டும் என புகார் மனு அளித்துள்ளோம்.இலஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்காததால் டிஜிபியிடம் மீண்டும் புகார் மனு கொடுத்துள்ளோம்.தவெக அரசு 6 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிவிட்டது.எம்எல்ஏக்கள் பதவி விலகல் செய்த உடனே தவெக உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது.அதிமுக தொண்டர்கள்,நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை.தவெக அரசால் விலை பேசப்பட்ட 6 சட்டமன்ற உறுப்பினர்கள்தான் சென்றிருக்கிறார்கள்.ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள குதிரை பேரம் நடக்கவில்லை எனச் சொல்கிறார்கள்.அதிமுகவில் எந்த உட்கட்சி பிரச்சினையும் இல்லை.திமுகவோடு எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றார்.

செய்தியாளர்களிடம் இன்பதுரை பாமஉ கூறியதாவது….

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடந்தது என்ற வழக்கை தமிழக போலீஸே எப்படி விசாரிக்கலாம்? என்னுடைய வழக்கில் நானே நீதிபதியாக இருக்கமுடியாது.இந்த வழக்கை சிபிஐயிடம் வழங்கவேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.குதிரை பேரத்தை திமுக, தவெக என யார் செய்தாலும் தவறுதான்.

ஏன் நாங்கள் கொடுத்த குதிரைபேர புகாரை இன்னும் விசாரிக்கவில்லை.இந்த வழக்கில் முதல்வர் விஜய்தான் குற்றவாளி.ஏனென்றால், அவர்தான் அதிமுக எம்எல்ஏக்கள் குழுமியிருந்த இடத்துக்குச் சென்றார்.விஜய் சென்றதும் மர்மமான முறையில் உள்ளது.அவர் அங்கு சில சைகைளைக் காட்டியதாகவும்,ஆசை வார்த்தைகளைக் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரிக்கவேண்டும்.தூயசக்தி ஆட்சி என்றால் வெளிப்படையாக அனைத்தையும் சொல்லவேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response