கொடநாடு வழக்கில் நடவடிக்கை – செங்கோட்டையன் தகவல்

வரு​வாய்த்​துறை அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கோவை விமான நிலை​யத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது….

முதல்​வர் விஜய் சொல்​லும் ஒவ்​வொரு வார்த்தைகளை​யும் முழு​மை​யாகக் கேட்​டு​விட்​டு,எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் பேசவேண்டும்.சட்​டப்​பேர​வையை விட்டு வெளியேபோய் கருத்து சொல்​லாமல்,உள்ளே இருந்து கருத்து சொன்​னால் அதற்​கான பதில் எதிர்க்​கட்​சித் தலை​வருக்குக் கிடைத்​திருக்​கும்.

திமுக கருத்​துகளை ஏற்​றுக்​ கொள்​ளாத காரணத்​தால்​தான்,மக்கள் நிராகரித்​துள்​ளனர்.முதல்​வர் விஜய்
பிறந்​தநாளன்று பள்ளி மாணவர்​கள் கட்​சிக்​கொடி ஏந்​தி​யதற்கு நாங்​கள் பொறுப்பல்ல.சட்​டப்​பேர​வைக்​குள் 2 முறை தேசியகீதம் இசைக்கப்​பட்​ட​தில் எந்தத் தவறும் இல்​லை.

தமிழக வெற்​றிக் கழகம் ஆட்​சி​யமைக்க பாஜக தலை​வர்​களை நாடிய​தாக நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். பாஜக ஆதரவை தவெக என்றைக்​கும் கேட்​க​வில்​லை.நயி​னார் நாகேந்திரன் காமெடி​யாக பேசிக்​கொண்​டிருக்​கிறார். நாங்​கள் தவறு செய்​ய​மாட்​டோம்,தவறு செய்​ய​விட​மாட்​டோம் என முதல்வர் சொல்​லி​ உள்​ளார்.

எனவே,கொட​நாடு எஸ்​டேட்​டில் நடந்த கொலை,கொள்ளை உள்பட அனைத்து விவ​காரங்​களி​லும்
சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும்.

இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

கொடநாடு வழக்கை தீர விசாரித்தால் அது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆபத்து என்று பலரும் சொல்லிகொண்டிருக்கிற நேரத்தில் செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்திருப்பது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Response