திருச்சி கிழக்கு தவெக வேட்பாளர் இவர்தான் – உறுதியான தகவல்

விஜய் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றவுடன் பல நடிகர்களுக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது.நடிகர் இராகவா லாரன்ஸும் அரசியலுக்கு வரவிருக்கிறார்.அவர்,விஜய் கட்சி சார்பாக திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குகிறார் என்று தகவல்கள் வெளியாகின.

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாக பரவிவரும் தகவலுக்கு விளக்கம் தருவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார். அதன்படி இன்று சமூக வலைதளத்தில் அவர் கானொலி ஒன்றை வெளியிட்டார். சுமார் 18 நிமிடங்கள் அவர் பேசியிருக்கிறார்.

அதன் இறுதியில்,நான் அரசியலுக்கு வரலாமா? என எனது இரசிகர்களிடமும், மக்களிடமும் கேட்க விரும்புகிறேன். அதற்கான தகுதி எனக்கு உள்ளதா?.அதை கமெண்ட் மூலம் தெரிவியுங்கள்.உங்கள் முடிவுக்காக நான் காத்திருக்கிறேன் என அந்த காணொலியில் இராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

அதாவது இரசிகர்களும் மக்களும் அரசியலுக்கு வாருங்கள் என்று அழைத்தால் வருவேன் இல்லையென்றால் வரமாட்டேன் என்பது அதன்பொருள்.

ஆனால்,உண்மையில் அவர்தான் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராகப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.

அதை உறுதிப்படுத்திக் கொண்டு உடனே அதை அறிவிக்காமல்,இரசிகர்களிடம் கருத்து கேட்பது போல் காணொலி வெளியிட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இப்போது என்ன நடக்கும்?

அவருடைய காணொலிக்குக் கருத்து தெரிவிக்கும் அனைவரும்,அரசியலுக்கு வாருங்கள் என்று அன்பாக அழைக்கப்போகிறார்கள்.அதை அவரும் பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டு அரசியலுக்கு வருவதாக அறிவிப்பார்.

அதன்பின்,ஒரு சுபயோக சுபதினத்தில் திருச்சி கிழக்கு தொகுதி தவெக வேட்பாளராக அவர் அறிவிக்கப்படுவார் என்று சொல்கிறார்கள்.

நடக்கட்டும் நடக்கட்டும்.

Leave a Response