
ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதில் தொடக்கம் முதலே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்துவருகிறது.அக்கட்சி சுமார் 110 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
அதற்கடுத்த நிலையில் திமுக கூட்டணி சுமார் 70 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாமிடத்தில் அதிமுக கூட்டணி உள்ளது.அக்கூட்டணி சுமார் 54 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு அக்கட்சி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது.இதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதுவரை பத்துத் தோல்வி பழனிச்சாமி என்று பெயர் பெற்றிருந்த அவர் இந்தத் தோல்விக்குப் பிறகு பதினொரு தோல்வி பழனிச்சாமி என்று அழைக்கப்படுவார் என்று சொல்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, எடப்பாடி இனியும் தலைவராகத் தொடர்ந்தால் அதிமுகவே இருக்காது என்கிற விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.
அதிமுக முன்னணியினர் உடனடியாக, சசிகலா உள்ளிட்ட விலக்கப்பட்டிருக்கும் அனைவரையும் சந்தித்துப் பேசி அவர்களைக் கட்சிக்குள் கொண்டுவரவேண்டுமென்கிற குரல்களும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன.
இனியாவது திருந்தி இந்த வேலையைச் செய்வாரா? அல்லது தன்னலத்துக்காக அதிமுக எனும் பெரிய கட்சியை அழித்தொழிக்கப் போகிறாரா? என்கிற ஆவேசக் குரல்களும் கேட்கத் தொடங்கியிருக்கின்றன.
இதனால் அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


