இரண்டு தொகுதிகளில் வென்ற விஜய் – எதை வைத்துக் கொள்வார்?

ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எட்டுமணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.தொடக்கம் முதலே நடிகர் விஜய்யின் தவெக, தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து மிகப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது.

இந்த நிலையில்.நடிகர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

இவற்றில் பெரம்பூர் தொகுதியில் சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்திலும், திருச்சி கிழக்கு தொகுதியில் 26,000 வாக்குகள் வித்தியாத்திலும் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.

மாதவரம் தொகுதியில் தவெக சார்பாக போட்டியிட்ட பிரபு தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சுமார் 83,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் தவெக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார்.

தூத்துக்குடி, தாம்பரம், தஞ்சை, மதுரை தெற்கு,அரக்கோணம்,மாதவரம் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர்.

தொடர்ந்து முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய், ஏதாவது ஒரு தொகுதியில் பதவி விலகவேண்டும்.அதன்படி அவர் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன்.

Leave a Response