எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஒன்றிய அரசு விளக்கம்

இந்திய ஒன்றியத்தில்,எரிபொருள் தட்டுப்பாடு பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. இந்நிலையில் இது குறித்து மக்களவையில் விளக்கம் அளித்த ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி…

இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை.விநியோகம் சீராக உள்ளது.ஹோர்முஸ் நீரிணை வழியே வரும் கச்சா எண்ணெய்யைவிட மாற்று வழியில் கூடுதல் எண்ணெய் வருகிறது.சீரான எரிபொருள் விநியோகத்தைப் பெற பிரதமர் மோடியின் ராஜதந்திர முயற்சிகளே காரணம்.

எல்பிஜி (எரிவாயு) உற்பத்தி கடந்த சில நாட்களில் 28% அதிகரிக்கப்பட்டுள்ளது.விநியோக கால அளவில் மாற்றம் எதுவுமில்லை. நாட்டுக்குத் தேவையான அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கேஸ் விநியோகம்; இந்தியாவின் எரிபொருள் இறக்குமதியில் 50% ஹோர்முஸ் நீரிணை வழியே நடக்கிறது. நாட்டின் மொத்த எல்பிஜி தேவையில் 87% வீட்டு உபயோகத்திற்கானது; அதற்கு முன்னுரிமை. பீதியால் நுகர்வோர் அதிக சிலிண்டர் வாங்கியதால் விநியோகஸ்தர்களால் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை.

உணவகங்களுக்குத் தேவையான சிலிண்டர் விநியோகத்தில் 10% முதல் 15% வரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிகப் பயன்பாடு சிலிண்டர் விநியோகம் 10 நாட்களில் சீரடையும். நவீன எரிசக்தி வரலாற்றில் உலகம் இதுபோன்ற தருணத்தை எதிர்கொண்டதில்லை. பெட்ரோல் டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் இருப்பில் எந்த குறையும் இல்லை. உள்நாட்டு தேவைக்காக எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response