சென்னையில் மழை – மக்கள் அவதி

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….

திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

8 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25″ செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (07-11-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வானிலை மையம் சொன்னபடி சென்னை நகரில் மாலை முதல் பரவலாக மழை பெய்துவருகிறது.ஓரிரு இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் சென்றவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

Leave a Response