ஒன்றிய அரசின்செயல் – எம் யூ ஜே கடும்கண்டனம்

பிபிசி (BBCWorld) நிறுவனத்தின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் நடைபெறும் வருமான வரி சோதனைக்கு சென்னை பத்திரிக்கையாளர் யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…….

பிபிசி வெளியிட்டுள்ள ‘India : The Modi Question’ ஆவணப் படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்திருக்கும் நிலையில், ‘சர்வே’ என்ற பெயரில் வருமான வரி சோதனை நடைபெறுவது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

ஏற்கனவே, நியூஸ்கிளிக், நியூஸ் லாண்டரி ஊடக நிறுவனங்களில் ‘சர்வே’ என்ற பெயரில் இதேபோன்று வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைகள் அரசியல் அமைப்புச் சட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ள ஜனநாயகத்துக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது. ஒன்றிய அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் ஊடகங்களை அச்சுறுத்தக் கூடியது.

எனவே, பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களின் உரிமையையும் சுதந்திரமான செயல்பாட்டையும் முடக்கக்கூடிய இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என சென்னை பத்திரிக்கையாளர் யூனியன் (MUJ) வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response