மருத்துவர் இராமதாசு பதிவு – உடனே செயல்பட்ட காவல்துறை கண்காணிப்பாளர்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு நேற்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில்… கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் வட்டம் மூங்கில்பாடி கிராமத்தில் குடிபோதையில் இருந்த காவல்துறை ஆய்வாளரால் வீடுபுகுந்து கடுமையாக தாக்கப்பட்ட ஒன்றிய செயலாளர் தம்பி சக்திவேலிடம் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தேன். அவருக்கு சிறப்பான மருத்துவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் உடல்நலம் பெற விழைகிறேன். சக்திவேலை தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பா.ம.க. வழக்கறிஞர் சிவராமன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். 

என்று கூறியிருந்தார்.

உடனடியாக அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது.

பேஸ்புக்கில் தன்னைப் பற்றி பதிவிட்டதற்காக, வாலிபரை நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கிய சின்னசேலம் காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, போலீசார் லஞ்சம் பெற்றுக் கொண்டு விடுவித்து வருவதாக இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். இதையறிந்த சின்னசேலம் காவல் ஆய்வாளர், இரவு பதினோரு மணி அளவில் அந்தப் பகுதி டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து விட்டு, இளைஞரை வீடு புகுந்து தாக்கியுள்ளார்,இதனை அவரது நண்பர், வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார்.வீடியோ வைரலாக பரவி காவல் உயர் அதிகாரிகளுக்கு சென்றது. இதையடுத்து சின்னசேலம் காவல் ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். 

இவ்வாறு செய்தி வந்திருக்கிறது.

Leave a Response