நீங்கள் யார் எடப்பாடி அவர்களே? – அதிரும் கேள்விகள்

கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக தலைமைச் செயலர் சண்முகம் பிரதமர் மோடி வெளியிடவுள்ள அறிவிப்பைப் பொறுத்து தமிழக அரசு முடிவெடுக்கும் என்று கூறினார்.

இதனால், தன்னிச்சையாக எந்த முடிவையும் முதல்வரால் எடுக்க முடியவில்லையா? என கேள்வி எழுப்பி பலரும் அவரை ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்கள்.

#whoareyouedappadi என்ற குறிச்சொல்லும் தமிழக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. பிற மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களுக்கான முடிவை தாங்களே எடுக்கும் நேரத்தில் தமிழக முதல்வர் அவ்வாறு எடுக்கவில்லை என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

மற்ற மாநில முதல்வர்கள் ஊரடங்கு நீட்டிப்புப் பற்றி அறிக்கை விடும் நேரத்தில் தமிழ்நாட்டில் தலைமைச் செயலர் அதை பிரதமர் மோடி அறிவிப்பார் என்றால் நீங்கள் யார் எடப்பாடி அவர்களே?? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Response