ரஜினி சொன்னதை செய்வாரா? – திருமாவளவன் ஐயம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு திருமண விழாவிற்காக நெய்வேலி சென்றிருந்தார்.

நெய்வேலி வட்டம் 25-ல் உள்ள என்.எல்.சி. விருந்தினர் இல்ல வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பனை விதைகளை விதைத்தார்.

இதைத் தொடர்ந்து தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது…

நடிகர் ரஜினிகாந்த் சாதி ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் உள்ளவர்களுக்குத் தனது கட்சியில் இடம் இல்லை என்று நிபந்தனை விதித்துள்ளார். இது ஜனநாயக ரீதியான கொள்கை என்பதால் வரவேற்கிறோம். அதை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதை போகபோகத் தான் பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாததால் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கருதி நடிகர்கள் புதிய கட்சிகளைத் தொடங்கி வருகிறார்கள். இதை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response