
ஜூன் 17 ஆம் தேதி பிக்பாஸ் 2 ஒளிபரப்பு தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்ததால் இதற்கும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மூன்று வாரங்கள் கடந்தும் நிகழ்ச்சி வேகம் பிடிக்கவில்லை. அதைப் பார்ப்பவர்கள் குறைந்து போனார்கள்.
மும்தாஜ், மமதி, யாஷிகா, மகத், பாலாஜி, சென்றாயன் போன்றோரோடு நடிகர் பொன்னம்பலமும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது எல்லோராலும் இவரெல்லாம் கலந்து கொண்டால் நிகழ்ச்சி வெளங்குமா? என்று எல்லோராலும் எள்ளி நகையாடப்பட்டார்.
ஜூலை 8 ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முன் அனந்துக்கு ஒரு சக்தி கொடுக்கப்படுகிறது. அதன் மூலம் இந்த வீட்டில் இருக்கும் யாராவது ஒரு நபரை வெளியே இருக்கும் சிறையில் அடைக்கலாம்.
அந்தத் தண்டனைக்கு பொன்னம்பலத்தைத் தேர்வு செய்தார் அனந்த். அதற்கு அவர் காரணமாக அனந்த் வைத்தியநாதன் கூறியது, “ஒரு பெண்ணுக்கு அனைத்து விஷயங்களிலும் உரிமை உள்ளது. அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிட உரிமை இல்லை. யாஷிகா, ஐஸ்வர்யா பற்றி பொன்னம்பலம் பேசியதைக் குறிப்பிட்டார். இதற்கு பிக் பாஸ் விட்டில் ஆதரவு இருந்தாலும் பார்வையாளர்கள் மத்தியில் பொன்னம்பலத்துக்கு ஆதரவாகப் பதிவிட்டு வருகிறார்கள்.
பொன்னம்பலத்துக்கு பார்வையாளர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருவதால் பொன்னம்பலம் ஆர்மிகள் அதிகளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதனால் பொன்னம்பலத்தை கேலி செய்தவர்கள் எல்லாம் அதிர்ச்சிக்கு ஆளாகினர். கடைசியில் பொன்னம்பலம்தான் பிக்பாஸ் 2 பிக்கப் ஆக உதவுகிறார் என்று பேசிக்கொள்கிறார்கள்.


