
கர்நாடகத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி குறித்து சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ட்வீட் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
”கர்நாடக மாநிலத்தில் பாஜகவினர் பெற்ற வெற்றி அவர்கள் பெற்ற வெற்றி அல்ல. அது மின்னணு வாக்கு எந்திரங்களின் வெற்றியாகும். மின்னணு வாக்கு எந்திரங்கள் மீது அனைத்து தரப்பினருக்கும் சந்தேகம் இருக்கிறது.
இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்கவேண்டிய பொறுப்பு பாஜகவுக்கு இருக்கிறது. இடைத் தேர்தலில் தோல்வியுற்ற பாஜக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுகிறது.
நீங்கள் உங்களை நம்பினால், மின்னணு வாக்குஎந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்துவதை கைவிட்டு, வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தல் நடத்தி வெற்றி பெறுங்கள்.
தேர்தல்கள் வரலாம், போகலாம், ஒரு சிலநேரங்களில் வெற்றி பெறலாம், ஒரு சில நேரத்தில் தோல்வி அடையலாம். ஆனால் ஒருபோதும் வெற்ற உழைப்பதை கைவிடக்கூடாது’’ என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரேயின் கருத்தை நவநிர்மான் சேவானா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரேயும் வரவேற்றுள்ளார்.


