இலங்கையை விட்டு அமெரிக்காவில் போய் ஒளிந்த ராஜபக்சேவின் தம்பி இலங்கை திரும்பியதும் கைது, அடுத்து ராஜபக்சே?

இலங்கை அதிபர்  தேர்தலில் ராஜபக்சே படுதோல்வியைத் தழுவியதும் இலங்கையை விட்டு ஓட்டம் பிடித்தார் ராஜபக்சேவின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்த  பசில்ராஜபக்சே.    இலங்கையில் இருந்து சென்று சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருந்த  அவரை ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரிக்க சர்வதேசக் காவல்துறை உதவியைக் கேட்கத் தயாராக இருந்ததாம் இலங்கை அரசு. இதனால் பசிலே ஏப்ரல் 21 அன்று இலங்கை திரும்பினார்.இந்த நிலையில்,

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக அவர் இன்று நிதி குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இன்று (ஏப்ரல் 22 )காலை 11.00 தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை அவரிடம் விசாரணை மேற்கொண்டதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தற்போது நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுவலை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய அவரிடம் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இனப்படுகொலைகளுக்குப் பதில் சொல்லும் காலம் தொடங்கிவிட்டது, அடுத்து ராஜபக்சேவும் கைது செய்யப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response