ரஜினி மன்றத்தில் பணம் வாங்கிக் கொண்டு பதவி – நிர்வாகி பகிரங்க குற்றச்சாட்டு

ஏப்ரல் 4 ஆம் தேதி,ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

கடந்த 20.3.2018, 21.3.2018 அன்று முறையே வட சென்னை, தென் சென்னை மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, ரஜினிகாந்த் ஒப்புதலுடன் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

வடசென்னை மாவட்டம்:-

செயலாளர் – இ.சந்தானம், இணைச்செயலாளர்கள் – கே.ரவி, யு.புருஷோத்தமன், துணைச்செயலாளர்கள் – பி.ரவிச்சந்திரன், டி.கே.தினேஷ்குமார் என்ற ஹாஜ், எஸ்.சத்யா, க.எழிலரசு, இளைஞர் அணி செயலாளர் – எஸ்.கிருஷ்ணசாமி, வழக்கறிஞர் அணி செயலாளர் – சி.தங்கராஜி, இணைச்செயலாளர் – எஸ்.ரவிச்சந்திரன், வர்த்தக அணி செயலாளர் – ஏ.வி.குணசேகர், துணைச்செயலாளர் – வி.வரதன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் – ஜெ.செந்தில், செயற்குழு உறுப்பினர்கள் – என்.ரஜினி ரவி, வி.முருகன், இரா.செல்வபாண்டியன், வி.எஸ்.கருப்பையா, வி.மகேந்திரன், டி.ஜெ.வில்சன்.

இவ்வாறு அறிவித்திருந்தார்.

இதில் இணைச்செயலாளராக நியமிக்கப்பட்ட யு.புருசோத்தமன், தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

அதோடு, 40 ஆண்டுகளாகப் பணியாற்றிய எனக்கு வடசென்னை மாவட்ட நிர்வாகிகளில் 2 பேரைத் தவிர மற்றவர்கள் யாரென்றே தெரியவில்லை. பணம் உள்ளவர்களுக்கே பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதைச் சரி செய்ய நான் எடுத்த முயற்சிகளுக்குப் பலனில்லை. எனவே விலகுகிறேன் என்று ரஜினிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response