மோடி வந்து சென்ற பின் சீமானைக் கைது செய்யத் திட்டம்?

ஏப்ரல் 10 அன்று சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடிய நேரத்தில், பணியிலிருந்த காவலர்களைத் தாக்கியதாகச் சொல்லி சீமானோடு சேர்த்து 38 நாம் தமிழர் கட்சியினர் மேல் பிணையில் வரமுடியாத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்த வழக்கைக் காரணம் காட்டி சீமானைக் கைது செய்யும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக்கொடி காட்ட அழைப்பு விடுத்துள்ளார் சீமான்.

இதனால் தமிழகம் முழுக்க நாம்தமிழர்கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு அக்கட்சியினரை மிகவும் நெருக்கமாகக் கண்காணித்துவருகின்றனர்.

இதனால் பிரதமர் மோடி வந்து சென்ற பின் சீமானைக் கைது செய்து சிறையிலடைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Leave a Response