
படத்தில் நடுவில் இருப்பவர் புரோஹித், இது ஆர் எஸ் எஸ் விழாவில் எடுக்கப்பட்ட படம்
செப்டம்பர் 30 சனிக்கிழமை காலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,பீகார்,அருணாசலபிரதேசம்,அசாம்,மேகாலயா மற்றும் தமிழகம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமித்தார்.
அதன்படி தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தும் அருணாச்சல பிரதேசத்தின் ஆளுநராக பி.டி. மிஸ்ராவும், பிகார் ஆளுநராக சத்ய பால் மாலிக்கும், அசாமின் ஆளுநராக ஜகதீஷ் முகியும் மேகாலயாவின் ஆளுநராக கங்கா பிரசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பை மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூடுதல் பொறுப்பாக கவனித்துவந்தார்.
தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் பன்வாரிலால் புரோஹித், மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர். 1977ல் தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். 1978ல் நாக்பூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 1982ல் மாநில அமைச்சரானார். 1984, 1989 (காங்கிரஸ்), 1996 (பாஜக) ஆகிய ஆண்டுகளில் மக்களவை உறுப்பினராக இருந்தார்.
2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் அஸாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநராக இருந்த ரோசைய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் முடிவடைந்தது. இதுவரை மகாராஷ்டிராவின் ஆளுநராக இருந்த சி. வித்யாசாகர் ராவுக்கு தமிழக ஆளநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. ஓராண்டுக்குப் பிறகு இப்போது புரோஹித் வருகிறார்.


