அபியும் அனுவும் மூலம் திரும்பி வந்த பியா..!


துறுதுறு கேரக்டர்களில் நடிக்க பொருத்தமான தேர்வாக இருந்தவர் தான் நடிகை பியா பாஜ்பாய்.. கோ, கோவா, ஏகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் சில காலம் தமிழ்சினிமாவில் இருந்து காணாமல் போனார். இப்போது பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பி.ஆர்.விஜயலட்சுமி கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப்பின் இயக்கியுள்ள ‘அபியும் அனுவும்’ படம் மூலம் மீண்டும் களத்தில் குதித்துள்ளார் பியா.

இது மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகியுள்ளது.. மலையாளத்தில் இதற்கு ‘அபியுடே கத அனுவிண்டேயும்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவின் இளம் நடிகரான டொவினோ தாமஸ் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழிலும் அறிமுகமாகிறார். முக்கிய வேடங்களில் பிரபு, சுகாசினி, ரோகிணி ஆகியோர் நடித்துள்ளனர். வரும் செப்-22ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.

Leave a Response