ஓவியாவின் இடத்தை யாராலும் நிரப்பமுடியாது – சுஜா ஒப்புதல்

ஓவியாவோட மைக்க வெச்சிருக்கிறதால நீ ஓவியா மாதிரிதான் நடந்துக்கணும். ஓவியா சண்டையே போட மாட்டாங்க. நாங்கதான் காரணமேயில்லாம சண்டை போடுவோம் என்றெல்லாம் சொல்லி சுஜாவை காயத்ரி ராகிங் செய்து கொண்டிருந்தார்.
சுஜாவைக் கிண்டல் செய்வதாக நினைத்துக்கொண்டு அவரையறியாமலேயே உண்மையைச் சொல்லிக்கொண்டிருந்தார் காயத்ரி.

அதற்கு சுஜா, ஓவியா மாதிரி நான் ஏன் இருக்கணும்? நான் நானா இருப்பேன். ஓவியாவின் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். சிரித்துக் கொண்டே இதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் காயத்ரிக்கு உள்ளூற நிச்சயம் எரிச்சல் தோன்றியிருக்கும் என்பதில் மாற்றமில்லை.

உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் சரி, வெளியே இருந்து வரும் புதிய நபர்களும் சரி, ஓவியாவின் பெயரைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. ஆனாலும், ஜாக்கிரதையாகத்தான் பயன்படுத்துகிறார்கள். அந்தப் பெயர் தொடர்பாக சிறிய அளவிலான எதிர்மறைக் கருத்தைச் சொன்னால் கூட பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்வோம் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.

நீங்க ஷட்அப் பண்ணுங்க என்று ஓவியா போல ஆரவ்விடம் ஜாலியாகப் பேசிக்காட்டினார் சுஜா. ‘நான் இந்த விளையாட்டுலயே இல்லிங்க என்று சோகமாகச் சொன்னார் ஆரவ். ஓவியா பாவம் சும்மாவிடுமா?

Leave a Response