பேய் விளையாட்டை எதிர்த்து அடுத்த ஓவியாவாக மாறும் ரைசா

பேய் நம்பிக்கை குறித்து பொதுவில் பல தவறான விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள பிக்பாஸ் குழு முடிவெடுத்து ஒரு விளையாட்டைத் தொடங்கியிருக்கிறது.

மற்றவர்கள் இந்த விளையாட்டில் அதிஉற்சாகமாகப் பங்கு பெற்றுக் கொண்டிருக்கும் போது ரைசா மட்டும் தன் ஆட்சேபத்தை வெளிப்படுத்தினார்.மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை தரும் விளையாட்டு என்றால் சரி. ஆனால், இது போன்று ஒருவரைக் குறிவைப்பது அபத்தமானது மட்டுமல்ல ஆபத்தானது என்றதோடு ‘என்னை வாக்குமூல அறைக்குக் கூப்பிடுங்கள் என்று அடம்பிடித்தார் ரைசா. அங்கு பிக் – பாஸிடம் தெளிவாகவே பேசினார். ‘இரவில் என்னால் தூங்க முடியவில்லை. தொந்தரவுகள் இருக்கின்றன. ஏதேதோ சத்தம் வருகிறது. பகலிலும் நீங்கள் தூங்கவிடவில்லையென்றால் எப்படி?’ இது சரியாக வராது. நான் கிளம்புகிறேன்’ என்றார்.

அடுத்த ஓவியாவாக மாறிக் கொண்டிருக்கும் ரைசாவை இழக்க விரும்பாத பிக் பாஸ், உடனே தணிந்த குரலில் ‘இரவில் நிம்மதியாக உறங்க உத்தரவாதம்’ என்றார்.

ரைசாவின் இந்தப் புகாரும் உண்மையா அல்லது அவருக்குத் தனியாக ஏதும் விளையாட்டு தரப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு விளையாட்டில் ஒருவரை மட்டும் தனிமைப்படுத்தி அவருக்குத் தெரியாமல் பேய் விளையாட்டு விளையாடுவது அபத்தமானது.

நாளைக்கே எந்தப் போட்டியாளராவது மனஉளைச்சலில் விநோதமாக நடந்து கொண்டாலோ அல்லது ஏதேனும் ஆபத்திற்கு மற்றவர்களின் உதவியை நாடினாலோ, பிக் பாஸ் ஏதோ சொல்லியிருக்கிறார் என்று மற்றவர்கள் நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தால் பிரச்னையாகி விடும். ஓவியாவின் மனஉளைச்சலை ‘நாடகம்’ என்றே நம்பிக் கொண்டு அவரை இன்னமும் புண்படுத்தி வெளியே அனுப்பிய நிகழ்வு ஏற்கெனவே நடந்திருக்கிறது.

Leave a Response