ஓவியாவிடம் மன்னிப்பு கேட்ட காயத்ரி – இது நிஜமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் ஏன் இந்த வீட்டை விட்டு வெளியேறக்கூடாது’ என்கிற தலைப்பில் எல்லோரும் இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.

சர்ச்சைக்குரிய காயத்ரி முதலில் பேசத்தொடங்கினார். அவருடைய பேச்சு,பொடி வைத்துப் பேசுவதாகவே இருந்தது. நல்லவர் போல் காட்டிக்கொள்ள முயன்றாலும் அவரால் முடியவில்லை என்பதே உண்மை.

அவர் பேச்சில், பிக் பாஸின் ஐம்பதாவது நாள் நிகழ்ச்சியிலும் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கெட்ட வார்த்தை பேசுகிறவள் என்கிற பிம்பம் என்மீது விழுந்து விட்டது. அதற்கு நான் மட்டும் காரணம் அல்ல, மற்றவர்கள் தூண்டி விட்டதுதான் காரணம்.. இந்த வீட்டில் எல்லா வேலைகளையும் பின்வாங்காமல் செய்திருக்கிறேன்.

ஓவியாவையும் இது போல்தான் திட்டியிருக்கிறேன். அவளுடைய நன்மைக்காகவே அவளைத் திட்டினேன்.நான் திட்டியதால் ஓவியா புண்பட்டிருந்தால் இதன் மூலம் அவளிடம் மன்னிப்பு கேட்கிறேன்.என்னோட அன்பான பக்கத்தை நீங்கள் பார்க்க வேண்டும். நிஜமான அன்போட நான் பழகுவதை நீங்கள் பார்க்க வேண்டும்.

ஓவியா இருக்கும்வரை அவருக்கு எதிராகவே செயல்பட்ட காயத்ரி, இப்போது ஓவியாவிடம் மன்னிப்பு கேட்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

Leave a Response