
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா இருக்கிறாரா? வெளியேறிவிட்டாரா? என்கிற பட்டிமன்றம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலானோர் ஓவியா இல்லையென்றால் பிக்பாஸ் பார்க்கமாட்டோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஓவியா ரசிகர்களின் கருத்துகளில் சில….
பாதியிலேயே வெளியேற வைக்கப்பட்டாலும் கெத்தா மரியாதையா, மக்களின் ஏகோபித்த அன்பில் இருப்பது தான் வெற்றி.. அந்த வகையில் ஓவியா வெற்றியாளர். அவருக்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையைச் சொன்னாலே போதும்.
தொடர்ந்து இருந்தாலும் வெற்றி பெற்றாலும் வெளியே வரும் போது தங்களது குணம், நடத்தையினால், கிடைக்கும் வெறுப்பு ரொம்பக் கேவலம். ஆப்ரேஷன் சக்ஸஸ். ஆனா பேஷண்ட் செத்துட்டார் கதை தான். வெற்றி பெறனும்ன்னு இப்படி ஒருத்தியை மிஸ் பண்ணிட்டோம்ன்னு குற்ற உணர்வு இப்போ உள்ள இருப்பவர்களுக்கு உணரமுடியாமல் போகலாம். ஆனா வெளியே வரும் போது மன அழுத்தம் உண்டாகும்.
இத்தோடு பிக்பாஸ் ஓவர். இனி பார்க்கும் எண்ணமில்லை. கமல் என்ற மனிதரின் மீதான பிம்பமும் உடைந்தது.
கமல் போன வாரம் இரண்டு மணிநேரம் பேசி கன்விஸ் செய்து இருக்க வச்சார்னு படிச்சேன் காயூ சக்திக்கெல்லாம் இன்னும் அவர் பலமா கொடுத்திருக்கணும் ..பிக்பாஸ் ஓவர்தான் ஓவியாவைப் பிடித்தவர்கள் பார்க்க மாட்டார்கள்
கமல் முன்பே (பரணி விஷயத்தில்) காயுவையும், சக்தியையும் கண்டிச்சு இருந்தால் இந்த அளவிற்கு போய் இருக்காது… சொல்வதுபோல் ஓவியா மக்கள் மனதில் வெற்றி பெற்றுவிட்டாள் இதுபோதும்.


